இந்துக் கல்லூரி மாணவருக்கு ஜனாதிபதி விருது.

பத்து வருடகால இடைவெளிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் ஐனாதிபதி சாரணனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சோந்த சிவானந்தன் விஜிதரன் என்ற மாணவரே இவ்வாறு தெரிவாகியுள்ளார்.

சாரணர் இயக்கத்தின் அதியுயர் விருதாகக் கருதப்படும் ஜனாதிபதி சாரணர் விருது இம்முறை யாழ். இந்துக் கல்லூரி மாணவருக்கு கிடைத்துள்ளது பெருமைக்குரிய விடயமாகும்.

இந்த விருதானது யாழ். இந்துக் கல்லூரிக்கு நீண்ட இடைவெளியான பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்துள்ளமை கல்லூரிச் சமூகத்திற்கு பெருமையினை ஏற்படுத்தியுள்ளது.

vijitharan-scout-president

Related Posts