இந்திய பயணிகளின் வியாபார செயற்பாட்டால் யாழ்.வியாபாரிகள் பாதிப்பு

yokeswareyசுற்றுலா விசாவில் இலங்கை வரும் இந்திய பயணிகள் யாழப்பாணத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபடுவதால் யாழ்.வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்திய பயணிகளின் வியாபார நடவடிக்கை தொடர்பில் யாழ்.வணிகர் கழகம் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

யாழில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்திய பயணிகள் தமது வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். புடவை மற்றும் அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் இவர்கள் தமது பயண பையில் இவற்றை கொண்டு வருகின்றனர்.

இப் பயணிகள், அலுவலகங்களில் கடமைபுரிபவர்களின் சம்பள தினத்தை கவனத்தில் கொண்டு தமது வியாபார நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை, ‘இந்திய வியாபாரிகளின் செயற்பாடு தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வரும் இந்திய பயணிகள் யாழில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்கவும்முடியாது, ஊக்குவிக்கவும் முடியாது. இவ்வாறு வியாபாரங்களில் ஈடுபடுவர்கள் உடனடியாக தமது தாய் நாட்டிற்கு திரும்புமாறு கோருகிறேன்’ என இலங்கைக்கான இந்திய துணைத்தூதவர் வி.மஹாலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Posts