யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
இந்த நாட்டில் எப்போது கண்டிராத வெள்ளை நிறத்திலான மிகவும் கொடிய விஷத்தைக் கொண்ட தேள் வகையொன்று யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தேள் கொட்டினால் மரணம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இந்தத் தேள் கொட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த தேள் வகை இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தில் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த தேள் வகைகளை ஆயுதமாக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தேள் வகைகளை இந்திய அமைதி காக்கும் படையினர் கொண்டு வந்திருக்கலாம் என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.எம். குலரட்ன சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
1991ம் ஆண்டில் முதல் தடவையாக வெள்ளைத் தேள் கொட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளைத் தேள் கொட்டியதனால் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.