இந்தியன் வீட்டுத்திட்ட இரண்டாம் கட்டப்பணியில் 395 வீடுகள் நிர்மாணம்

india_houseஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணியில் யாழ், மாட்டத்தில் 395 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டாம் கட்ட வீட்டுதிட்டப்பணிக்காக யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பழை, சாவகச்சேரி, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவில் உள்ள நான்கு கிராம அலுவலர் பிரிவு தெரிவு செய்யப்பட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்தியன் வீட்டுத்திட்ட இரண்டாம் கட்டப்பணிகள் கடந்த ஒக்ரோபர் மாதம் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதில் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் உள்ள தந்தை செல்வாபுரத்தில் 160 வீடுகளும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள எழுதுமட்டுவால் கிராம அலவலர் பிரிவில் 60 வீடுகளும்,கரம்பகம் கிராம அலுவலர் பிரிவில் 85 வீடுகளும் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மருதங்கேணி கிராம அலுவலர் பிரிவில் 90 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வீட்டுத்திட்டப்பணிகள் யாவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நேரடிக்கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன் இதில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிற்கு 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபா இத்திட்டத்திற்கென வழங்கப்பட்டுள்ளதோடு இந்தக் கொடுப்பனவுகள் பொதுமக்களுக்கு நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts