ஆழ்வாருக்கு இன்று தேர்

இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் இன்று காலை 9.15 மணியளவில் தேரில் எழுந்தருளவுள்ளார்.

vallipuram_kovil

கடந்த மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆழ்வாரின் பெருந்திருவிழாவில் இன்று காலை 8 மணியளவில் வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்று தொடர்ந்து ஆழ்வார் தேரேறி பக்தர்களிற்கு அருள் பாலிக்கவுள்ளார்.

தொடர்ந்து நாளை 8 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் சமுத்திர தீர்த்த திருவிழா பூரண சந்திர கிரகணத்தை முன்னிட்டு இம்முறை வழமையை விடவும் முன்னதாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை பிற்பகல் 1 மணிக்கு வசந்தமண்டபப் பூஜைகள் நடைபெற்று 2.30 மணிக்கு ஆழ்வார் தீர்த்தமாட புறப்பட்டுச்செல்வார். 3.30 மணிக்கு தீர்த்தமாடி முடித்துக்கொண்டு 5.00 மணியளவில் ஆலயம் திரும்புவார்.

நாளை மறுதினம் 9 ஆம் திகதி வியாழக்கிழமை 10.00 மணிக்கு பட்டுத்தீர்த்த திருவிழா என்று அழைக்கப்படும் கேணி தீர்த்தம் இடம்பெறும். அதனை தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கத்துடன் ஆழ்வாரின் பெரும் திருவிழா நிறைவுறும்.

Related Posts