ஆளும் கட்சி வேட்பாளரை மஹிந்த ஹத்துசிங்க தெரிவு செய்தார்?

mahinda_hathurusingheவடமாகாண சபைத் தேர்தலுக்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை யாழ்ப்பாண இராணுவக் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ ஆகியோர் நேர்முகம் செய்து தெரிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த மற்றும் ஏ எச் எம் பௌசி ஆகியோரும் இருந்துள்ளனர்.

இதன்பின்னர் முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 20 பேரும் மேலதிக ஆலோசனைகளுக்காக கொழும்புக்கு இராணுவத்தினராலேயே அழைத்து செல்லப்படவுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் தயா மாஸ்டர், ரெமீடியஸ் உட்பட்ட 21 பேரும் மன்னாரில் 3 பேரும் வவுனியாவில் 2 பேரும் கிளிநொச்சியில் 6 பேரும் ஆளும் கட்சியில் இணைந்துப் போட்டியிட விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts