ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

alunar-chanthera-sri--113ஆவது திருத்தச் சட்டத்திற்கமைவாக மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையிலான இந்த கலந்துரையாடல் யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.

வட மாகாண செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஆளுநருக்கு எத்தகைய அதிகாரங்கள் அரசியலமைப்பின் எந்தெந்த சரத்துக்கள் மற்றும் விதிகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் தமக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு உரிய விளக்கங்களை ஆளுநர் வழங்கினார்.

இராணுவ பின்புலமுள்ள ஆளுநரினை மாற்ற வேண்டுமென்ற பிரேரணை கடந்த 10ஆம் திகதி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts