எரிபொருள் பவுசரும் முச்சக்கர வண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆனையிறவு பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீராவியடியைச் சேர்ந்த இராதாகிருஸ்ணன் மீனாம்பாள் (வயது-58) அவரது மகன் இராதாகிருஷ்ணன் கிருபானந்தன் (வயது-28) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.
எரிபொருள் பவுசர் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.