ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை…!

வடமாகாண ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உறுதியளித்துள்ளனர்.

tea 27.4

யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆசிரிய உதவியாளர் சங்கப் பிரதிநிதிகள் தமது கோரிக்கை தொடர்பில் நேற்றய தினம் (27) இணைத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது கருத்துரையாற்றிய அமைச்சர் அவர்கள், ஆசிரியர் உதவியாளர்களாக இருப்போரை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கும் பொருட்டு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அதன்பிரகாரம் 2009 ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்களாக நியமனப் பெற்றதிலிருந்து நிரந்தர நியமனத்திற்குள் தம்மை உள்வாங்குமாறு ஆசிரிய உதவியாளர்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆசிரிய உதவியாளர்களுக்கு முதற்கட்டமாக 3,000 ரூபாவும் பின்னர் 6,000 ரூபாவும் தற்போது 10,000 ரூபாவுமாக மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பெருமுயற்சியின் பயனாக தொண்டர் ஆசிரியர்கள் முதன்முதலாக யாழ். மாவட்டத்திலேயே நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்பதாக பிரதான வாயிலில் சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு நின்றிருந்த ஆசிரிய உதவியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்காக மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்துக் கலந்துரையாடி, தமது கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

Related Posts