அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு

ஏஞ்சலோ மெத்தியூஸை தலைவராகவும் தினேஸ் சந்திமாலை உப தலைவராகவும் கொண்ட இலங்கை அணியில் குசேல் ஜனித் பெரேரா, குசேல் மெண்டிஸ், டில்சான், தனஜ்ய டி சில்வா, மிலிந்த சிறிவர்தன, அவிஸ்க பெர்ணான்டோ, தனுஷ்க குணவர்தன, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், திஸர பெரேரா, டில்ருவான் பெரேரா, சீக்குகே பிரசன்ன, அமில அபொன்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related Posts