அனுராதபுரம் விமானப் படை முகாமின் மீது தாக்குதல் நடத்தி 400 கோடி ரூபா நஸ்டம் ஏற்படுத்தியதோடு, 14 படையினர் மரணிக்கவும் காரணமாக இருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றம்சாட்டப்பட்ட இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இவர்களை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அனுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 16 விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.