அனர்த்த வேளையில் யாழ்.மாவட்டத்தை பாதுகாப்பதற்கு விசேட செயற்றிட்டம் இடர் முகாமைத்துவ நிலையம் தயாரிக்கிறது

kattu2020 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தை அனர்த்தத்தில் இருந்து பாதுகாத்து, பாதுகாப்பான சமூகமாக மாற்றும் வகையில் செற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி தெரிவித்தார்.

இடர் முகாமைத்துவ உப குழுக்களுக்கிடையிலான கலந்துரையாடல் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர். ஜெனரல் ஹாமினி ஹெட்டியாராச்சி, யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இடர் முகாமைத்துவத்தில் சகலரும் இணைந்து பணியாற்ற வேண்டும். தனித்து இடர் முகாமைத்துவ திணைக்களத்தினர் மட்டும் இந்த வேலைகளை முன்னெடுக்க முடியாது. அனர்த்த தணிப்பு வேலைகளில் சகலரும் பணியாற்றும் போதுதான் வெற்றியடைய முடியும்.

யாழ். மாவட்டத்துக்கு 2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான 3 வருடங்களுக்கு 120 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டுக்கு 33 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 50 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது என்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹாமினி ஹெட்டியராச்சி தெரிவித்தார். இதன் பின்னர் உரையாற்றிய யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி: 2020 ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தை பாதுகாப்பான சமூகமாக மாற்றும் வகையில் செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சகலரது ஒத்துழைப்புகளும் இருந் தால்தான் இந்த இலக்கை அடைய முடியும்.
இந்த ஆண்டு யாழ். மாவட் டத்தில் உள்ள புத்திஜீவிகளை அழைத்து ஆய்வரங்கு ஒன்று இடர் முகாமைத்துவம் தொடர்பில் நடத்தப்படவுள்ளது.

எமது பிரதேசத்துக்கு சாத்தியமான செயற்றிட்டங்கள் எவை என்று ஆராய்ந்து அதற்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள 473 பாடசாலைகளில் 30 பாடசாலைகளில் ஏற்கனவே இடர்முகாமைத்துவ தொண்டர்களை உருவாக்கியுள்ளோம்.

ஏனைய பாடசாலைகளுக்கு இந்த வருடம் உருவாக்கவுள்ளோம். அத்துடன் சகல பாடசாலைகளுக்கும் அனர்த்தப் பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கவுள்ளோம். வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள் இந்த வருடமும் மேற்கொள்ளப்படவுள்ளது. என்றார்.

Related Posts