அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பின்வரும் நாடுகளின் தூதுவர்களின் பங்கேற்புடன் விசேட கூட்டமொன்று (2020.04.16) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் இந்நாட்டிலுள்ள தூதுவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
கலந்துக்கொண்ட தூதுவர்கள் –
01. H.E Alaina Tepliz Ambassador to the USA,
02. H.E Sarah Hulton – High Commissioner to the UK,
03. H.E. David Jhon Holly – High Commissioner to the Australia,
04. H.E. David McKinnon – High Commissioner to the Canada,
கொரோனா அச்சுறுத்தலின் மத்தியில் இந்த நாட்டின் அரசாங்கம் மற்றும் மக்கள் பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக இந்த நாடுகளின் ராஜதந்திரிகள் அந்தந்த நாடுகளின் பாராட்டினை இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்ததுடன், எதிர்கால நடவடிக்கைகளின் போது மேற்குறிப்பிட்ட நாடுகள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.