அஜித் படத்தில் நடிக்க அமெரிக்கா செல்கிறார் அப்புக்குட்டி!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் வீரம். தமன்னா நாயகியாக நடித்த அந்த படத்தில் அஜித்தின் தம்பிகளாக விதார்த், பாலா உள்பட நான்கு பேர் நடிக்க, அஜித் வீட்டு வேலைக்காரராக மயில்வாகனம் என்ற வேடத்தில் அப்புக்குட்டி நடித்திருந்தார்.

ajith-appukkuddi

அதன்காரணமாக அஜித் காம்பினேசனில் அவருக்கு பல காட்சிகள் அமைந்தன. அதோடு, அந்த படத்தில் நடித்த பிறகு அப்புக்குட்டிக்கு ஒரு போட்டோ செஷன் நடத்திய அஜித், அவரது கெட்டப்பை மட்டுமின்றி, அவரது பெயரையும் சிவபாலன் அப்புக்குட்டி என்று மாற்றி வைத்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 57வது படத்திலும் நடிக்கிறார் அப்புக்குட்டி. இந்த படத்திலும் அவருக்கு அஜித் வீட்டு வேலைக்காரர் வேடம்தானாம்.

ஆனால் வீரம் படத்தில் லுங்கி, பனியன் அணிந்து நடித்த அப்புக்குட்டி, இந்த படத்தில் பேன்ட்-சட்டை அணிந்த டீசன்டான வேலைக்காரராக நடிக்கிறாராம். அந்த காட்சிகளில் நடிப்பதற்காக விரைவில் அமெரிக்கா செல்கிறார் அப்புக்குட்டி.

Related Posts