தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை வெளியாகின்றது!!

2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் நாளை முதல் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55 ஆயிரத்து 529 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அதேபோன்று தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 மாணவர்களும் தோற்றிருந்தனர்.

இரண்டாயிரத்து 995 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts