சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்கள காடையா்கள் தாக்குதல்!!

நீதிமன்ற தீா்ப்பினை மீறி நீராவியடி பிள்ளையாா் ஆலய சூழலில் பிக்குவின் உடலம் தகனம் செய்யப்படுவதை கண்டித்த சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்கள காடையா்கள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனா். இதனை கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் பகீஸ்காிப்பில் இறங்கினா்.

நீதிமன்ற தீா்ப்பினை மீறி பொலிஸாா் முன்னிலையில் பிக்குவின் உடலை நல்லடக்கம் செய்வத ற்கு பௌத்த பிக்கள் முயற்சித்ததை தட்டிக் கேட்டதற்காக சிங்கள காடையா்கள் சிலா் சட்டத்தர ணி சுகாஸ் மீது தாக்குதல் நடாத்தியிருக்கின்றனா்.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் இன்றைய தினம் வழக்குகளுக்கு செல்வதை தவிா்த்து பகிஸ்காிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

Related Posts