புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதியை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 500 ரூபாய் கொடுப்பனவு 750 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வருடாந்தம் 1,30,000 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts