வடமாகாண பாடசாலைகளில் கல்விகற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை http://WWW.edumin.np.gov.lk என்னும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.