முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பூவரசங்குளப் பகுதியில், சிசு ஒன்றின் சடலம் குளம் ஒன்றின் அருகில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவை தாய், குளத்தில் அருகில் பிரசவித்திருக்கலாம் எaன்றும், அதன் பின்னர் குளத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சிசுவின் தாயையும் தேடி வருகின்றனர்.