எச்சரிக்கையை மீறிய விடுதி மீதும் உரிமையாளர் மீதும் ஆவா குழு தாக்குதல்!!

கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதியினை மூடுமாறு ஆவா குழுவால் அச்சுறுத்தல் விடுவக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறு இரவு அந்த விடுதிக்குள் புகுந்த கும்பல் ஒன்று உரிமையாளர் மீது வாளால் வெட்டியதுடன், விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் விடுதியின் உரிமையாளர் கையில் காயமடைந்துள்ளார்.

கொக்குவில் ஆடியபாதம் வீதியில் புதிதாக விடுதி ஒன்று திறக்கப்பட்டது. அந்த விடுதியில் சமூக சீர்கோடுகள் நடைபெறுவதாக குற்றம் சுமத்தி, அந்த விடுதியினை மூடுமாறு ஆவா குழு என்று எழுதப்பட்ட கடிதம் ஒன்றின் ஊடாக எச்சரிக்கைவிடுவிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் அந்தக் கடிதம் விடுதியின் உரிமையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஞாயிறு இரவு 9.30 மணியளவில் விடுதிக்குள் புகுந்த சிலர், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் உரிமையாளர் மீது வாள்வெட்டு நடத்தியுள்ளனர். மேலும் விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு கும்பல் தப்பிச் சென்றது.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts