வடக்கு மாகாணத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலமைப் பரிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார்.
வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த பிள்ளைகளுடைய கல்வி மேம்பாட்டுக்காக புலமைப் பரிசில் திட்டமொன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு மாவட்ட மட்டத்தில் அந்த திட்டம் செயற்படுத்தப்படும்.
மாற்றுத்திறானாளிகளுக்கான பிரத்தியேக பேருந்து சேவையொன்றை முதன் முதலாக வடக்கில் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று நடைபெற்ற வடக்கு மாகாண வட்டமேசை மாநாட்டில் தெரிவித்தார். இந்தச்சேவை வருகின்ற ஒக்டோபரில் முதற் கட்டமாக கிளிநொச்சியில் இருந்து யாழ்பாணத்திற்கு நடைபெறும் எனவும் ஆசனங்கள் இல்லாமல், சக்கர நாற்காலியுடன் ஒருவர் அப்படியே பேருந்துக்குள் ஏறி பாதுகாப்பாக பயணிக்கக் கூடிய வகையில் பேருந்து அமைந்திருக்கும் எனவும் ஆளுநர் அங்கு கூறினார்.
உலகின் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் இது ஆரம்பிக்கப்படாதிருப்பது வருத்தத்திற்குரியது என்றும் இந்தச்சேவைக்கான போக்குவரத்துச்சேவைக்கான மானியத்தை மாகாண அரசு வழங்க நடவடிக்கை எடுக்கும் எனவும்
அதேபோல் பாடசாலை மாணவிகளுக்காக விசேட பேருந்து ஒன்றை யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.