பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானம்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீருடை கொடுப்பனவு, அலுவலகக் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தினால் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்வரும் 17ம் திகதி முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

சீருடை, எரிபொருள் மற்றும் காரியாலயக் கொடுப்பனவுகளை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts