யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த நபர் கொடிகாமம் பகுதியில் மது போதையில் தொடருந்து தண்டவாளத்தில் படுத்திருந்த காரணத்தினாலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது உயிரை மாய்த்து கொள்வதற்காக அவர் தண்டவாளத்தில் படுத்திருந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.