புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் கைது

யாழ். புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 15 பேரும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Related Posts