முல்லைத்தீவு – சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் .
குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை அழகாக ஓவியமாக வரைந்து அமைச்சரிடம் கையளித்த முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தை சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா என்ற இளைஞனின் திறமையை பாராட்டி தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார்.
சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் பட்டதாரி யுவதி ஒருவருக்கும் அரச வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை பணித்தார் .
இதேவேளை, அரச வேலைவாய்ப்பிற்கான நியமனங்களை நாளை வெள்ளிக்கிழமை உரியவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.