2019ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அனுமதி அட்டை இதவரை கிடைக்கப் பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் திணைக்களம் அறிவித்துள்ளது.
https://doenets.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தில் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை சரியாக பதிவு செய்து தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியம்.
கடந்த சில தினங்களாக நிலவிய தபால் ஊழியரின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக பரீட்சை அனுமதி அட்டை பரீட்சார்த்திகளுக்கு கிடைப்பதில் தாமதம் நிலவியதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.