வடக்கை வாட்டும் வரட்சி! குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்!!

வடக்கில் கடுமையான வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வரட்சியுடன் காலநிலை காரணமாக பெரும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குளங்களில் நீர்மட்டங்கள் குறைந்து வருகின்றது. வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து மிதக்கும் காட்சி பார்க்கும் மக்களை பெரும் பதைபதைக்கு உள்ளாக்கியுள்ளது.

வடக்கில் கடும் வெம்மையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுகின்றது. வவுனியாவிலும் வரட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ்வரட்சி காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றன.

வவுனியா, புதுக்குளம், மூனாமடுக் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக அதிகளவிலான நீர் பெறப்பட்டமையாலும், வெப்பமான வரட்சிக் காலநிலையாலும் நீர்வற்றியுள்ளது. இதனால் அப்பகுதிக் குளத்தில் பெருந்தொகையான மீன்கள் இறந்து வருகின்றன. அத்துடன், கால்நடைகளும் நீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.

Related Posts