உயிரிழந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாருக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாரான திருமதி சுப்பிரமணியம் சின்னம்மாவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிரந்தர வீடு அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கான நிதி வழங்குமாறு கிளிநொச்சியிலுள்ள சமூக ஆர்வலர் ஒருவரின் ஊடாக வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பன் தலைவர் எஸ். சந்திரகுமாருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று வவுனியாவிலுள்ள தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து கல் மணல், பெற்றுக்கொள்வதற்கு ஒரு தொகை நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி இறுதி யுத்தத்தின்போது அரச படைகளிடம் சரணடைந்து புனர் வாழ்வு பெற்று சமூகமயமாக்கப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னர் சுவாசப் பையில் ஏற்பட்ட புற்று நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது தாயார் தற்போது அடிப்படை வசதியற்ற தற்காலிக வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அரசாங்கத்தினால் தற்போது அவருக்கு வழங்கப்பட்ட நிரந்தர வீடு அமைப்பதற்கான ஆரம்ப வேலை மேற்கொள்வதற்கு ஒரு தொகை பண உதவி கோரிய நிலையில் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது