பருத்தித்துறையில் புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவச் சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்கள் நேற்று (14.05.19) சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன. அதன்போதும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் சீருடைய ஒத்த வடிவமைப்புடைய துணிகளான ஆடைகள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டன. அதில் சிறுவர்களின் ஆடைகளும் உள்ளடங்கும்.
அவற்றை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 தமிழ் வர்த்தகர்களும் 7 முஸ்லிம் வர்த்தகர்களும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 11 பேரும் நீதிமன்றில் முற்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை காவற்துறையினர், முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நகரிலும் இவ்வாறான தேடுதல்களில் பல லட்சம் ரூபா பெறுமதியான ஆடைகள் காவற்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது