பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் ஹோட்டலுக்குள் வெடிகுண்டுகள் வைத்திருந்த நபா்!!

உணவகத்திற்குள்ளிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜன்குளம் தாவூத் ஹோட்டல் உாிமையாளா் பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு கனகராஜன்குளம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொறுப்பதிகாரியின் அனுமதியின்றி இப்பொருட்கள் எவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Related Posts