இலங்கையில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தரம் 6 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கே இன்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதியே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பாடசாலை வளாகங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாதென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஆனாலும் பாடசாலைக்கு வரும் அலுவலக வாகனங்கள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியான தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையில் பைகளை அனைத்து பாடசாலை மாணவர்களும் உபயோகிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.