கிளிநொச்சியில் சந்தேகத்தில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது!

கிளிநொச்சியில் நேற்று (25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பங்களை அடுத்து நாடாளவிய ரீதியில் தேடுதல்களும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்படி ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வியாபார நிலையங்கள் நடாத்திவரும் நான்கு பேரும், கிளிநொச்சி ஏ9 வீதியில் தும்பினி விகாரைக்கு அருகில் ஒருவரும், கனகாம்பிகைகுளம் பிரதேசத்தை சேர்ந்து ஒருவரும் என ஆறு முஸ்லிம்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களுக்கு சில முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுவதாக தெரிவித்தே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts