2018ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களில் முதல் பத்து இடங்களுக்குள் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும் இடம்பிடிக்கவில்லை.
அத்துடன், வடக்கு கிழக்கில் மாணவர்களின் சித்தி வீதமும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.
அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 ஆயிரத்து 495 பேர் பரீட்சைக்குத் தோற்றி 6 ஆயிரத்து 337 பேர் மட்டுமே உயர் தரத்தைத் தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர். இது 67.02 சதவீத சித்தியாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 405 பரீட்சாத்திகளில் ஆயிரத்து 434 மாணவர்கள் மட்டுமே உயர் தரத்தைத் தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர். இது 54.3 சதவீதமாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 494 பரீட்சாத்திகளில் ஆயிரத்து 246 பரீட்சாத்திகள் மட்டுமே உயர்தரத்தைத் தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர். இது 60.4 சதவீதமாகும்.
மன்னார் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 638 பரீட்சாத்திகளில் ஆயிரத்து 321 மாணவர்கள் மட்டுமே உயர் தரத்தை தொடர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இது 69. 34 சதவீதமாகும்.
வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 143 பரீட்சாத்திகளில் ஆயிரத்து 929 மாணவர்கள் மட்டுமே உயர்தரத்தை தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர். இது 68. 28 சதவீதமாகும்.
வேம்படி மகளிர் கல்லூரி 51 9 A,, 49 – 8 A.
யாழ். இந்துக் கல்லூரி 35 9A , 42 8A.
கிளிநொச்சி மகாவித்தியாலயம் 9A – 14
ஹாட்லிக் கல்லூரி 9 A – 16 , 8 A- 11.