பெண்களிடம் சேஷ்டை விடும் ஆவா குழு!

மானிப்பாயில் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் மீது ஆவா குழுவிலிருந்து தண்டனைபெற்ற சிலர் சேஷ்டை விடுவதாக தகவல் வந்துள்ளது.

தனியார் வகுப்புகளுக்கும், கோயில்களுக்கும் செல்லுகின்ற பெண்களிடம், அவர்கள் செல்லும்போது பின்னால் தட்டிவிட்டு ஓட்டம்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றால் ஆவா குழு என தண்டனை பெற்ற உறுப்பினர்களே இவ்வாறு சேஷ்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களின் பின்னால் தட்டிவிட்டுச் செல்வதும், தகாத வார்த்தைகளால் பெண்களை வர்ணிப்பதும் பெண் பிள்ளைகளின் பெற்றோர் தட்டிக் கேட்பதற்கு பயப்படுவதும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றர்.

இதற்கு மானிப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிட்டால் மேலும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts