வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி சமய அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்காவே பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.
மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறும் தெரிவித்த ஆளுநர் இத்தினத்திற்கான பதில் பாடசாலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.