யாழ். போதனா மருத்­து­வ­ம­னைக்கு பெருன்பாமை இனத்தவர் சிற்­றூ­ழி­யர்­களாக நியமனம்!!

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் எதிர்­வ­ரும் 15ஆம் திகதி திறந்து வைக்­கப்­ப­ட­வுள்ள அவ­சர விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வுக்கு நிய­மிக்­கப்­ப­டும் சிற்­றூ­ழி­யர்­க­ளில் 60 சத­வீ­த­மா­னோர் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அவ­சர விபத்­துப் பிரிவு அமைக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வ­ரும் 7ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வி­ருந்த நிலை­யில், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணம் வரு­கை­த­ரும்­போது அத­னைத் திறப்­ப­தற்கு ஏற்­ற­தாக திறப்பு விழா பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

புதி­தாக திறக்­கப்­ப­டும் விபத்­துப் பிரி­வுக்கு 100 சிற்­றூ­ழி­யர்­கள் தேவை என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த வெற்­றி­டங்­களை நிரப்­பும் முயற்­சியை கொழும்பு சுகா­தார அமைச்சு மேற்­கொண்­டுள்­ளது.

தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்­தோ­ருக்கு அந்த நிய­ம­னங்­கள் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் எதிர்ப்பு வெளி­யிட்­ட­தைத் தொடர்ந்து அவர்­க­ளின் பரிந்­து­ரை­யின் பேரில் 40 பேருக்கு நிய­ம­னங்­கள் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. எஞ்­சி­யோர் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் த.சத்­தி­ய­மூர்­தி­யைத் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது, புதிய சிகிச்­சைப் பிரி­வுக்கு 100 பேருக்­கான வெற்­றி­டங்­கள் இருக்­கின்­றன என்­பது உண்மை. ஆனா­லும் நிய­மன அதி­கா­ரம் எமக்­கில்லை.

அது கொழும்பு அமைச்­சுக்­கு­ரி­யது. நிய­ம­னம் வழங்­கப்­பட்­டுள்­ளதா என்­பது எமக்­குத் தெரி­யாது. எமது மருத்­து­வ­ம­னைக்கு கட­மை­யைப் பொறுப்­பேற்க வரும்­போது நிய­ம­னம் வழங்­கப்­பட்­டமை தெரி­ய­வ­ரும் – என்­றார்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ராட்­ன­வி­டம் கேட்­ட­போது, நாம் நிய­ம­னங்­கள் வழங்­கும்­போது தமிழ், சிங்­கள, முஸ்­லிம் என்று பாகு­பாடு பார்ப்­ப­தில்லை. அனைத்து இனங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளை­யுமே நிய­மிக்­கின்­றோம்.

அதே­வேளை வடக்­குக்­கான நட­வ­டிக்­கை­ளின் போது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் அறி­வு­றுத்­த­லு­டன், அந்த மாகா­ணத்­தைச் சேர்ந்த மக்­கள் பிர­தி­நி­தி­க­ளு­டன் பேசியே நட­வ­டிக்கை எடுக்­கின்­றோம் – என்­றார்.

Related Posts