யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவிற்கும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று பலாலியில் நடைபெற்றதாக தெரியவருகின்றது.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் 4 பேருடைய விடுதலை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை பார்வையிட நேற்றைய தினம் துணைவேந்தர் உட்பட மாணவர்களின் பெற்றோர்களும் சென்றிருந்தனர்.
அதனையடுத்து பலாலியில் உள்ள படைத்தளத்தில் ஹத்துருசிங்கவுடன் இன்று சந்திப்பு ஒன்றிற்கு துணைவேந்தர் மற்றும் பீடாதிபதி ஆகியோரை வருமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து அவர்கள் இன்று கட்டளைத் தளபதியினைச் சந்தித்ததாகவும் விரைவில் மாணவர்கள் நால்வரும் விடுதலை செய்யப்படுவர் என்றும் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.