இலங்கையின் 71 ஆவது சுதந்திரதினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8 ஆம் உறுப்புரைக்கமையவே இவ்வாறு கொண்டாப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8 ஆவது உறுப்புரையில் தேசியதினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவால் தேசியதினம் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.