ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அரசியலமைப்பு வரைவுத் திட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபைக்கு அடுத்த வாரமளவில் கையளிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதன்போது அரசியல் அமைப்பு குறித்த பரிந்துரைகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டறிந்துகொள்ளவுள்ளதுடன் அரசியல் கட்சிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகளையும் அரசியல் அமைப்பு சபையில் முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால், நாட்டின் செயற்பாடுகளுக்கு நிறைவேற்று அதிகாரமே சிறந்ததென கூறும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதனை இரத்து செய்வதற்கு விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts