இரணைமடு குளம் புனரமைப்பு செய்யப்பட்டதில் பாரிய ஊழல்கள் மோசடிகள் நடைபெற்று உள்ளது எனவும் , அதனால் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஈ. பி.டி.பி கோாியுள்ளது. இது குறித்து இன்று ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போது,
அக்கட்சியின் செயலாளா் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் வடமாகாணசபை எதிா்க்கட்சி தலைவருமான சி.தவராசா ஆகியோா் கூட்டாக இந்த குற்றச்சாட்டையும், விசாரணை கோாிக்கையையும் முன்வைத்தனா். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,
இரணைமடு குளம் பாாிய ஆபத்தை உண்டாக்கபோகிறது என்பதை அறிந்திருந்த அதிகாாிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் மக்களுக்கு போதிய விழிப்புணா்வை வழங்க தவறியமையே பாாிய அனா்த்தத்திற்கு காரணம்.
இரணைமடு குளம் சுமாா் 6 ஆயிரம் தொடக்கம் 7 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் பு னரமைப்பு செய்யப்பட்டது. அதில் ஊழல் இடம்பெற்றுள்ளது. அதை மறைப்பதற்காகவும் குளத்தின் நீா்மட்டம் குறைக்கப்படாமல் அனா்த்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது குறித்து அரசாங்கம் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவேண்டும்.
யாழ்.குடாநாட்டுக்கு தண்ணீர் கொடுக்கவேண்டாம். என கூறி மக்களை சிலர் குழப்பினார்கள். ஆனால் இன்று குளத்திலிருந்து பெருமளவு தண்ணீர் கடலுக்குள் சென்றிருக்கின்றது. மேலும் கடலுக்கு சென்ற தண்ணீர் மக்களையும் அழித்துள்ளது. யாழ்ப்பாண மக்களுக்கு நாங்கள் தண்ணீர் கேட்கும்போது விவசாயிகளின் வயிற்றில் அடித்து தண்ணீர் தாருங்கள் எனக்கேட்கவில்லை.
விவசாயிகளின் தேவைக்கானது போக மிச்சமான நீரை தாருங்கள் என கேட்டோம். அதனையும் சிலர் குழப்பியடித்து மக்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருந்தார்கள். அதேபோல் சுமார் 6 ஆயிரம் தொடக்கம் 7 ஆயிரம் மில்லியன் ரூபாய்நிதி செலவில் குளம் புனரமைப்பு செய்யப்பட்டது. அதில் பாரிய ஊழல்கள் நடந்துள்ளது. குறிப்பாக கீழ் வாய்க்கால் அமைப்பு மற்றும் பாலங்கள் அமைப்பு போன்றவற்றில் ஊழல்கள் நடந்துள்ளது. அவற்றை மறைப்ப்பதற்காக சிலர் வேண்டுமென்றே குளத்தில் நீரை அதிகளவில் தேக்கி ஒரே தடவையில் திறந்து விடுவதன் ஊடாக கீழ் வாய்க்கால் மற்றும் பாலங்களை சேதப்படுத்தி தங்களுடைய ஊழலை மறைக்க முற்பட்டுள்ளார்களா? என்ற நியாயமான சந்தேகம் எமக்கு உள்ளது. எனவே அரசாங்கம் இந்த விடயம் தொடர்பான விசாரணை ஒன்றை நடாத்தவேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் வடமாகாண எதிர்கட்சி தலைவர் சீ.தவராசா குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இரணைமடு குளத்தில் புனரமைப்புக்கு முன்னர் 82 ஆயிரம் ஏக்கர் அடி நீர் கொள்ளளவாக இருந்தது.
புனரமைப்பு செய்யப்பட்டதன் பின்னர் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் அடி குளத்தின் மொத்த கொள்ளளவாக இருந்தது. இதில் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வருடத்திற்கு தேவை யான நீர் 8 ஆயிரத்து 100 ஏக்கர் அடி மட்டுமேயாகும். ஆக 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் அடி நீரில் 8 ஆயிரத்து 100 ஏக்கர் நீர் என்பது சாதாரண விடயம். அதனை கூட சிலர் தங்களுடைய சுயநலன்களுக்காக தடுத்தார்கள். இந்த வருடம் இரணைமடு குளத்தின் மொத்த கொள்ளளவில் 3 மடங்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டிருக்கின்றது.
ஆக மொத்தத்தில் குளத்தை வைத்து சிலர் அரசியல் நடத்துகிறார்கள். அவர்கள் மக்களை குறித்து எப்போதும் சிந்திப்பது கிடையாது. மேலும் இரணைமடு குளத்தின் வான் கதவுகளை ஜனாதிபதி திறந்துவைத்தபோது 36 அடி நீர் மட்டத்திலிருந்து 8 இன்ச் நீர் குறைக்கப்பட்டது.
அனர்த்தம் நடப்பதற்கு முதல் நாள் குளம் நிறைந்து காணப்பட்டது. அன்றைய தினம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து அதிகமாக இருந்துள்ளது.
மேலும் இரணைமடு குளத்திற்கு நீர் வரும் பாதையில் உள்ள குளங்கள் நிரம்பி எப்போதும் உடைக்கலாம் என்ற நிலை காணப்பட்டது. இந்த விடயங்கள் அத்தனையும் அதிகாரிகளுக்கும், பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் தெரியும்.
ஆனால் அவர்கள் அதை குறித்து கரிசனை செலுத்தவில்லை. அனர்த்தம் ஒன்று உருவாகலாம் என எச்சரிக்கைகயை மக்களுக்கு கொடுக்கவில்லை. ஆகவே இரணைமடு குளத்தின் நீர் முகாமைத்துவத்தில் அரசியல் நிரம்பியிருக்கின்றது.
இரணைமடுக் குளத்தை காட்டிலும் பல மடங்கு பெரியது கந்தளாய் மற்றும் மொறஹகந்த போன்ற குளங்களாகும் அவை மிக துல்லியமாக முகாமை செய்யப்படும் நிலையில் இரணைமடு குளத்தை சரியாக முகாமை செய்ய முடியாமை எதற்காக? என கேள்வி எழுப்பினர்