முல்லைத்தீவு கடற்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (புதன்கிழமை) காலை கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதி கடற்கரையிலேயே குறித்த ஸ்கூட்டர் வகையினைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் கரை ஒதுங்கியுள்ளது.
கிழக்கு மாகாண பதிவில் காணப்படும் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றாக பழுதடைந்து துருப்பிடித்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
மோட்டார் சைக்கிள் கரை ஒதுங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.