முல்லைத்தீவில் பயங்கரவாதத்திற்கு எதிராகச் சுவரொட்டிகள் !

முல்லை மாவட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான இளையோர் அமைப்பு என்ற அமைப்பின் பெயரில் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் பல பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்தச் சுவரொட்டிகளில் நீண்டகால யுத்தம் நிறைவிற்கு வந்து இப்போது நாம் ஓரளவு நின்மதியான காற்றினை சுவாசிக்கின்றோம் இதனைக் குழப்பும் விதமான செயற்பாடுகளும் இடைக்கிடை நடைபெறுகின்றன.

அனைத்துவிதமான கொலைகளையும் சுமூகமாக நாம் எதிர்ப்போம் இப்படியான விசமிகளை நாம் இனம்கண்டு தண்டனை வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டு முல்லை மாவட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான இளையோர் அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts