மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் நேற்று இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து நாடாளுமன்றத்திலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ்மா அதிபர் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து ஆராய சிறப்பு குற்றப்புலனாய்வுக் குழுவொன்றும் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.