முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடவேண்டும்.
தற்காலிக வீடுகளில் இருக்கின்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிதிவழங்கல் செயற்பாடும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நிவாரண சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது.
அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிதிகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவு மீளக்கூடும் என்று நம்பிக்கை கொள்கின்றேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.