தமிழ் மக்களுக்கு தமிழீழம் தேவையில்லை: விந்தன்

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு வேண்டுமே தவிர தமிழீழம் தேவையில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்; கனகரத்தினம் விந்தன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நல்லாட்சி பிரிவின் உறுப்பினர்கள் யாழ். மாநகர சபையில், மாநகர முதல்வர், உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

அதேவேளை, யுத்தம் முடிவடைந்த பின்னரான 3 வருட காலத்தில் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகளை பார்த்து விட்டு, யாழ். மாவட்ட மக்கள் பிரச்சினைகளின்றி இருக்கின்றார்கள் என்று கூற முடியாது. தமிழ் மக்கள் தென்பகுதி மக்களை போன்று சுயாதீனமாகவும், சகல தீர்வுகளுடனும் வாழ வேண்டும் என்று கூறினார்.

அத்துடன், தமிழ் மக்களுக்கும் தென் பகுதி மக்களுக்கும் கிடைக்கும் உரிமைகள் கிடைக்கப்பட வேண்டும் என்றும்; தமிழ் மக்களுக்கு கல்வி, அபிவிருத்தி, தொழில், குடியேற்றத்துடன் சிறையில் வாழும் இளைஞர்களுக்கான விடுதலை குறித்தும் அரசு எந்தவொரு பதிலையும் சொல்லவில்லை.

மக்களுக்கான உரிமை விகிதாசார அடிப்படையில் கூட, யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் அரசு உடனடியாக தீர்வு பெற்று தர வேண்டும் மென்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts