யாழ்ப்பாணம், வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடைகள், அவற்றை அணிந்த உருவப்படங்கள், கொடிகள் என்பவற்றை காட்சிப்படுத்த ஊர்காவற்துறை நீதவான் அ.ஜூட்சன் தடையுத்தரவு வழங்கியுள்ளார்.
சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தடையுத்தரவு வழங்க வேண்டுமென கோரி ஊர்காவற்துறை பொலிஸார் நீதிமன்றில் மனு தாக்கல் ஒன்றை செய்தனர்.
குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் (திங்கட்கிழமை)நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளப்பட்டபோது, விடுதலை புலிகள் அமைப்பின் சீருடைகள், அவற்றை அணிந்த உருவப்படங்கள், கொடிகள் என்பன காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு தடை இல்லையென நீதவான் தனது கட்டளையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.