கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபாலிடும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த கூறினார்.