வடக்கில் டெங்கு அபாயம்: வைரஸ் காய்ச்சலும் பரவுகிறது – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகரித்துள்ளன என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், நாட்டின் பல மாவட்டங்களில் இன்புலுவன்ச வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இடைவிடா காய்ச்சல், இருமல், வாந்தியெடுத்தல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரின் சோதனையைப் பெறுமாறு ஆலோசனை வழங்கியுள்ள சுகாதார அமைச்சு, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகக் கவனமாக இருக்குமாறும் கேட்டுள்ளது.

“வடக்கு மற்றும் மேல் மாகாணத்தில் நீடிக்கும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளன. அந்த மாகாணங்களில் டெங்கு நோய்த் தொற்று அபாயம் அதிகரித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அனைத்து சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வருடத்தின் பதினொராவது மாதமான இதுவரையான காலப்பகுதியில் நாடுமுழுவதும் 42 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கை என்ற போதும் அதன் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது” என்று டெங்கு நுளம்பு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ நிபுணர் பிரஷூலா சமரவீர தெரிவித்தார்.

Related Posts