வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

“கஜா“ புயல் காரணமாக வடமாகாண பாடசாலைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே-இன் அலுவலகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள கஜா புயல் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்வுகூறப்பட்ட நிலையில் வடக்கின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது.

அதற்கமைய, யாழின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழகத்தின் பல பகுதிகளில் கஜாபுயல் தாக்கம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts