யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அடையாள போராட்டத்தில்

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களைக்கண்டித்தும் சூழலில் இராணுவ பொலிஸ் பிரசன்னத்தினை எதிர்த்தும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அடையாள போராட்டத்தில் இன்று ஈடுபட்டது. பல்கலை வாயிலில் சுலோகங்களுடன் விரிவுரையாளர்கள் கூடி ஒருமணிநேரம் தமது எதிர்ப்பினை காட்டினர்

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட விரிவுரையாளர்கள், “தமிழர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு தமிழர்கள் தீபமேற்றவும் தடையா?”, “பல்கலை வளவுக்குள் இராணுவம் காடைத்தனம்”, “கல்விக் கூடமா? இராணுவமுகாமா? போன்ற பதாகைகளை மும்மொழிகளிலும் ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

Related Posts